கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் 2 மில்லியன் பேர் உயிரிழக்கலாம்!!!

 கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் யூகான் மாநிலத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனோவை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால் மக்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தக்க நேரத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தியதால் கொரோனாவின்  கோர தாண்டவம் குறைய தொடங்கியது. பின்னர் சில தினங்களுக்கு பின்பு கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதால்  இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பொதுமுடக்கத்தை படி படியாக தளர்த்தியது. பொதுமுடக்கத்திலிருந்து வெளியே வந்த மக்கள், எந்த ஒரு கட்டுப்பாடின்றி வெளியே சுற்றியதால் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இந்த இரண்டாம் அலையின் போது தான் இந்தியா பெரும் உயிரிழப்புகளை சந்தித்தது. குறிப்பாக சொன்னால் கொரோனாவின் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது.இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் காட்டியதால், கொரோனா இரண்டாம் அலையின் போது ஓரளவிற்கு பாதிப்புகள் குறைந்தது.  உலகில் மீண்டும் கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் பெரும்பாலான நாடுகள் பொதுமுடக்கத்தை தளர்த்தி வருகிறது.இந்நிலையில் சீனா ஆராய்ச்சியாளர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அதன்படி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் ஒரு வருடத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர்  உயிரிழக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் தெரிவித்திருப்பதாவது, தொற்றை தடுக்கக்கூடிய சிறப்பான தடுப்பூசிகளை தயாரிப்பது வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும், தற்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை கணக்கிட, பிரிட்டன் மற்றும் சிலி போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.உலகளவில் மொத்தமாக கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிகளை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…