கொஞ்சம் அசந்தாப்புல மயங்கிட்டேன் ! அதுக்கு பிரேத பரிசோதனை வரைக்கும் போவீங்களா 

குற்றத்தில் பெரும் குற்றமாக கருதப்படுவது, உயிருள்ளவரை இறந்தவராக அறிவிக்கபடுவது தான். அதிலும் ஒரு மருத்துவரே இச்செயலை செய்தால் அது மிகப்பெரிய துரோக செயலாகும். அந்த வகையில் ஸ்பெயினில் நாட்டின் வில்லபோனாவில் உள்ள அஸ்டூரியாஸ் மத்திய சிறைச்சாலையில், ஜிமினெஸ் என்ற கைதி ஒருவர்  மயங்கி இருந்ததால், காவல் அதிகாரிகள் அவரை   மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் உயிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.இதனை உறுதி செய்ய நீதிமன்றம் இரண்டு மருத்துவர்களை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அவர்களும் அவரது இறப்பை உறுதி செய்தனர்.

எனவே அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  பிரேத பரிசோதனைக்கு முன், உடல் பேக் செய்யப்பட்டிருந்த பையிலிருந்து சத்தம் கேட்க தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த பையை பிரித்து பார்த்துள்ளனர். அதில் இறந்தவர் உயிருடன் இருந்திக்கிறார்.  

பின் ஜிமினெஸ் என்ற அந்த கைதியை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மயக்க நிலையில் இருந்த கைதி இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர், தனது தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…