இதுக்கு எப்ப சார் எண்டு! புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்ததோடு, உணவின்றியும் தவித்து வந்தனர்.

இதனை தடுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைய தொடங்கியது.ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய கொரோன வைரஸான ஓமைக்ரான் பரவ தொடங்கியது. இதனால் மீண்டும் பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தியது. 

இந்நிலையில் புதிய வகை வைரஸால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நைஜீரியாவில் கொரோனா வைரஸுக்கு அடுத்ததாக புது விதமான லாஸ்சா என்ற வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரஸ் எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது.

இந்த வைரஸ் 21 முதல் 30 வயதில் உள்ளவர்களையே பெரிதளவு பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வைரஸ் நைஜீரிய நாட்டில் 36 மாநிலங்களில் பயங்கரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லாஸ்சா வைரஸால் 40 பேர் உயிரிழந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…