எத்தன பிரச்சனைய தான் சமாளிக்கிறது! கடலில்  மூழ்கும் அமெரிக்கா

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் ஏற்பட்ட காட்டுத்தீ, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரழிவுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதிக வெப்பநிலையின் விளைவாக கிரீன்லாந்தில் வழக்கத்திற்கு மாறாக ஆர்க்டிக் பெருங்கடலில் இருக்கும் பனிப்பாறைகள் மிக அதிக அளவில் உருகியுள்ளன. சமீபத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினல் -2 (Copernicus Sentinel-2) செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய புகைப்படங்கள் மூலம் உருகிய பனிப்பாறைகளில் இருந்து நீர் வெளியேறுவது தெரிய வந்துள்ளது.

அண்டார்டிகாவுக்கு அடுத்தபடியாக கிரீன்லாந்து பூமியில் இரண்டாவது பெரிய பனிக்கட்டியை கொண்டுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக பில்லியன் கணக்கான பனிக்கட்டிகள் உருகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகளாவிய வெப்ப நிலை உயர்வை குறைக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆர்க்டிக்கில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக கிரீன்லாந்து மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டியை அதாவது சுமார் சுமார் 22 ஜிகா டன்கள் பனிக்கட்டியை இழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அளவு பனி உருகியுள்ள நிகழ்வு கிரீன்லாந்தின் வரலாற்றில் ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த 1950-க்குப் பிறகு பனிகட்டி உருகிய நிகழ்வில் தற்போதைய நிகழ்வு, மூன்றாவது பெரிய இழப்பாகும். மற்ற இரு பெரிய இழப்புகள் 2012 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பதிவானது.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.அதன்படி   கிரீன்லாந்தில் வேகமாக பனிக்கட்டிகள் உருகுவதால், அமெரிக்கா முழுவதும் அரை மீட்டர் அளவுக்கு கடலில் முழுக்க வாய்ப்பு உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…