இது எப்படி சாத்தியமாச்சு!! 8 பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ முடியுமா??

ஒரு முறை கல்யாணம் செய்வதே  பெரும் பாடாக இருக்கும் நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 8 முறை கலையகம் செய்துள்ளார். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இச்செய்தி அவரது  அனைத்து  மனைவிமார்களுக்கும் தெரியும் என்பதே.இச்செய்தி இணையத்தில் பெரும் பரப்பை கிளப்பியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த Ong Dam Sorot என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார்.இவர் 8 பெண்களை வரிசையாக திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.இதில் என்ன அதிசியம் என்றால் 8 பெண்களுக்கு இடையில் எந்தவித சண்டை, பொறாமை போன்றவை எதுவும் வராதாம்.Sorot 8 பெண்களை திருமணம் செய்த காதல் கதையை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.அதாவது Sorot, தனது அனைத்து மனைவிகள் மீது அளவு கடந்த காதல் வைத்துள்ளாராம்.

Sorot தனது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்ததும் காதலில் விழுந்துள்ளார்.அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து திருமணம் செய்தார்.

அவரை திருமணம் செய்த பிறகு,  இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார்.நாங் எல்லிற்கு Sorot முதல் திருமணம் குறித்து தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துவிட்டார்.

மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை  இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

7வது மனைவியை திருமணம் செய்தது மிகவும் சுவாரஸ்யம் தான்.தனது  தாயுடன் கோயிலுக்கு செல்லும் போது நோங் ஃபில் என்பவரை பார்த்துள்ளார்.

எட்டாவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க சுற்றுலா சென்றிருந்த போது பார்த்ததும் காதல் தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்து அதன் பிறகு ஏழு மனைவிகளின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்.தற்போது இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Sorot தனது அழகான 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரராகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…