சொன்னா கேளு அங்க போகாத ! மீண்டும் சீனாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சவுதி அரேபியாவிடம் இருந்து கடந்த நவம்பர் மாதம்  300 கோடி டாலர்களை கடனாக பெற்றது. அதில் 200 கோடி டாலர்களை செலவழித்துவிட்டது.  இந்நிலையில், சீன நாட்டிடம் மேலும்  3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்க தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. அதற்காக அங்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், சீன அதிபர்  ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.

அதன்பின்பு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பெறுவதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனா 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாகிஸ்தானுக்கு கடனாக கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி கடந்த மாதம், பாகிஸ்தான், சவுதி அரேபியாவிடம் 3 பில்லியன் டாலர் வாங்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…