100 அதிகாரிகளை படுகொலை செய்த தாலிபான்கள் 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியவுடனே தாலிபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.நிர்வாகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு தீவிரவாத கும்பலிடம்  ஒரு நாடு கிடைத்திருப்பது, குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்ற செயலாகும்.  

அங்கு புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தாலிபான்கள் ,மக்களுக்கு எதிராக பல கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். பெண்கள் வெளியே வரக்கூடாது, பெண்கள் படிக்க கூடாது என்று ஆரம்பித்து ஆண்கள் முகச்சவரம் செய்ய கூடாது, திருடினால் கைகள் வெட்டப்பட்டு என்ற சட்டம் வரை பல சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளனர். தடையையும் மீறி யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன் அந்நாட்டு பொருளாதார நிலை மிக மோசமாகியது. தாலிபான்கள் ஆப்கானிஸ்டன் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்றும்  பொருளாதாரம் சீரமைக்கப்படும் என்றும்  தெரிவித்தனர். ஆனால் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு வாழும்  மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இது போதாக்குறைக்கு அங்கு  அத்தியாவசிய  பொருள் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பசி, பட்டினி  போன்றவை ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தின் காரணமாக மக்கள் இறந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய தலிபான்கள், கடந்த ஆட்சியில் பணியாற்றிய 100க்கும் அதிகமான அதிகாரிகளை கொலை செய்திருக்கிறார்கள். இதில் அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து பணி புரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா சபையின் பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸ் கூறியிருக்கிறார்.

மேலும் அந்நாட்டில் நடந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள் தலிபான்களால் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கொலைகள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…