மீண்டும் தாக்குதல் நடத்திய ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் இறந்தனர்.6 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரமும் அமீரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டனர். எனினும் இதை அமீரக படையினர் இடையிலேயே தடுத்து நிறுத்தி அழித்தனர்.

   இந்நிலையில் 3ஆவது முறையாக மீண்டும் ஏவுகணை தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. இம்முறையும் ஏவுகணை இடைமறித்து தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மக்கள் வசிக்காத பகுதியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததாகவும் இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகத்திற்கு இஸ்ரேல் அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இத்தாக்குதல் முயற்சி மிகுந்த கவனம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…