மூன்றாம் உலக போர் கண்டிப்பாக நடக்கும் – டொனால்ட் டிரம்பின் அதிரடி பேச்சு

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனால் கடும் அதிருப்தி கொண்ட டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் மீது தொடர்ந்து பல்வேறு பல குற்றச்சாட்டுகளை சுமதி வருகிறார். 

இந்நிலையில் டெக்ஸாஸ் மாகானத்தில் நேற்று செய்தியாளர்களை சந்திப்பின் பொது டொனால்டு டிரம்ப் பேசியது, “பைடனின் திறமையற்ற, பலவீனமான நிர்வாகத்தால் மூன்றாவது உலகப் போர் மூளக்கூடிய வாய்ப்பு அதிகம்.ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு, வட கொரியா அதிகப்படியான ஏவுகணைகள் ஏவி தனது திறமையை சர்வதேச அளவில் நிரூபிக்க முயன்று வருகிறது. மேலும் அப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவதில் பைடனின் நிர்வாகம் சரியான முறையை செயல்படுத்தவில்லை.மேலும் வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், மெக்சிகோ – அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக குடிபெயருபவர்களை முதலில் தடுக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு ஐரோப்பா மீது கவனம் செலுத்த தேவையில்லை. கிழக்கு ஐரோப்பாவிற்கு அமெரிக்க வீரர்களை அனுப்பவதற்கு முன்பாக டெக்சாஸ் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலை கட்டுப்படுத்த வேண்டும். நான் மட்டும் இப்போது வெள்ளை மாளிகையில் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் பிரச்னையே ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் இருந்த போது எப்படி அவர் நிர்வாகத்தை நடத்தினர் என்பது நம் அனைவரும் தெரிந்த விஷயமே என்று பைடன் விசுவாசிகள் இணையதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…