பசியால் 8 சிறுவர்கள் உயிரிழப்பு!!

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற பெண்கள் தாலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை முழுவதும் கைப்பற்றினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான் ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தினராக இருந்த ஹசாரா என்று அழைக்கப்படும் ஹசாரா இன மக்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த ஹசாரா இன மக்கள் ஜெங்கிஸ் கான் படைப்பிரிவிலிருந்து வெறியேறியவர்கள் என்ற வதந்திகள் உள்ளது.
தற்போது மீண்டும் தாலிபான் பயங்கரவாதிகள் கையில் ஆப்கானிஸ்தான் நாடு கிடைத்திருக்கும் நிலையில் “ஹசாரா இன மக்களை எங்கள் அரசு பாதுகாக்கும்” என்று தாலிபான்கள் உறுதி அளித்தனர்.
ஆனால் ஹசாரா மக்கள் மீது தொடர்ந்து தாலிபான்கள் வன்முறைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது . இந்த மாத தொடக்கத்தில் மட்டும் ஹசாரா இனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி உட்பட 13 பேரை தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்நிலையில் ஹசாரா இன மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் மேற்கு காபூலில் சிறுவர்கள் 8 பேர் பசி, பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ஆப்கான்சிதான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹாஜி முகமது மொஹகேக் “மேற்கு காபூலில் வசித்து வரும் ஹசாரா இனமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் பசி, பட்டினியால் சிறுவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்” என்று கூறினார். உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.