ரஷ்யாவில் வெடி பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் வெடி விபத்து

போரினாலும், வன்முறையாலும் மக்கள் சாவதை விட, யாரோ ஒருவர் செய்கின்ற தவறினால் ஏற்படும் இழப்பே மிகவும் கொடுமையானது.
அந்த வகையில் ரஷ்யாவில் ரியாசான் பகுதியில் வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடி சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் தொழிற்சாலையின் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் இதுவரை 16 பேர் வரை பலியாகி உள்ளனர். ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 9 பேர் விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 170- அவசர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த சம்பவம் அங்குள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளது.மேலும், இந்த வெடி விபத்து தொழில்நுட்ப காரணத்தினால் ஏற்பட்டுள்ளது என்று அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த வெடி விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.