டிரம்ப்கென தனி சமூக வலைத்தளம்

பல சர்ச்சையான செயல்களுக்கும், கேளிக்கையான விஷயங்களுக்கும் பெயர் போனவர் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது வன்முறையை தூண்டும் வகையிலான பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அவர் பதிவிடும் கருத்துக்கள், சர்ச்சைகளையும், பரபரப்பை ஏற்படுத்தியதால் சில நேரங்களில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் அவர் பதிவிட்ட பதிவுகளை நீக்கி வந்தன.
ஒரு கட்டத்தில் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் கூட தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நான் தனியாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்குவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் சொன்னதை செய்யும் விதமாக அவருக்கென சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளார். அந்த சமூக வலைதளத்தின் பெயர் ட்ரூத் சோசியல் என்பதாகும்.

அந்த சமூக வலைத்தளத்தில் பீட்டா வெர்ஷன் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.