மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சில் ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் : தாலிபான்களின் முடிவுக்கு யுனிசெப் வரவேற்பு

இளம்குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ் , கை கால்களை முற்றிலும் செயலிழக்கவும் செய்யும் .இதனால் , உலகம் முழுவதும் போலியோவிற்கு எதிரான முன்னெடுப்பை யுனிசெப் எடுத்து வருகிறது .அந்த வகையில் அரசியல் , போர் பதற்றங்களுக்கு நடுவில் சிக்கிவந்த ஆப்கானிஸ்தானில் மீண்டும் போலியோ முகாம் வருகிற நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
யுனிசெஃப், ஐக்கிய நாடுகளின் நிறுவனம் ஆப்கானிஸ்தான் தனது முதல் போலியோ தடுப்பூசி முகாமினை நவம்பர் 8 அன்று நாடு முழுவதும் நடத்தும் என்று அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் போரால் பாதிக்கப்பட்ட நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு நடைப்பெற உள்ள முதல் போலியோ முகாம் இதுவாக இருக்கும் .

2001 ல் அமெரிக்க தலைமையிலான கூட்டணியால் தாலிபான்கள் தூக்கி எறியப்பட்ட சில ஆண்டுகளில், தடுப்பூசி பிரச்சாரம் நாட்டில் மிகவும் முன்னேறியது. இருப்பினும், தாலிபான்கள் மீண்டும் ஊடுருவியதால், ஆப்கானிஸ்தானில் மூன்று வருடங்களாக போலியோ முகவர்கள் வீட்டுக்கு வீடு வருகை தருவது தடைசெய்யப்பட்டது.போர் சூழல் எப்போதும் நிலவியதால் , ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளில் வசிக்கும் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு வழி இல்லாமல் இருந்தனர் .
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ தொற்று உள்ளது.இதன் அடிப்படையில் வரும் நவம்பர் மாதம் போலியோ சொட்டு மருந்து முகாமினை நடத்த தாலிபான்களின் முழு ஆதரவு வழங்கியுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது .

தாலிபான்களின் இந்த முடிவை உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெப் வரவேற்று உள்ளது.நாடு முழுவதும் வீடு வீடாக மீண்டும் சென்று போலியோ வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது .பெண் ஊழியர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கெடுக்கவும் , இந்த முகாமினை நடத்துவதற்கு பாதுகாப்பு வழங்கவும் தாலிபான்கள் முன்வந்துள்ளன .போலியோ தடுப்பூசியை மறுதொடக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், வரவிருக்கும் போலியோ விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது 6 முதல் 59 மாத வயதுடைய குழந்தைகளுக்கு வைட்டமின் A இன் கூடுதல் டோஸ் வழங்கப்படும் என்று WHO தெரிவித்துள்ளது. “இந்த முடிவு போலியோவை ஒழிக்கும் முயற்சிகளில் ஒரு பெரிய முன்னேற்றத்தை எங்களை அனுமதிக்கும்” என்று ஆப்கானிஸ்தானின் யுனிசெப் பிரதிநிதி ஹெர்வ் லுடோவிக் டி லைஸ் கூறினார் .