மீண்டும் மசூதியில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க ராணுவம் சென்ற பின், தாலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர்.
நிர்வாகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு தீவிரவாத கும்பலிடம் ஒரு நாடு கிடைத்திருப்பது, குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்ற செயலாகும்.
அங்கு புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தாலிபான்கள் ,மக்களுக்கு எதிராக பல கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். பெண்கள் வெளியே வரக்கூடாது, பெண்கள் படிக்க கூடாது என்று ஆரம்பித்து ஆண்கள் முகச்சவரம் செய்ய கூடாது, திருடினால் கைகள் வெட்டப்பட்டு என்ற சட்டம் வரை பல சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து மூன்று வாரமாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் மசூதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நடந்து வருகிறது. கடவுளர்களின் பெயரை சொல்லி மக்களை கொத்துக்கொத்தாக மக்கள் கொல்வது எவ்வாறு ஏற்க முடியும்.
காந்தகாரில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிராத்தனைக்காக அங்கு நிறைய மக்கள் கூடியிருந்தனர். ஷியா பிரிவினருக்கு சொந்தமான அந்த மசூதியில் நடத்தப்பட்ட அந்த குண்டு வெடிப்பினால் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஸைத் கோஸ்டியிடம் கேட்டபோது “இந்த குண்டு வெடிப்பை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமித்திருக்கிறேன். ” என்று அவரை கூறியுள்ளார்.