பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றத்திற்கு தடை

பாகிஸ்தானில் ,ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடக்கும் இந்த அவலச் செயலைக் கண்டித்து மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் அங்கு கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்ட மசோதாவிற்கு, மத சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஒப்புதல் தர மறுத்துள்ளது. அந்த மசோதாவில் “மதம் மாற விரும்புவர்கள் சுய விபரங்களுடன் எதற்காக மதம் மாறுகிறோம் என்று காரணத்தை மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும். மத மாற விரும்புவோர், மிரட்டல் காரணமாக மதம் மாறவில்லை என்று நீதிபதி உறுதி செய்த பின்னரே மதம் மாற அனுமதிக்க வேண்டும் “என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ருபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதாவிற்கு பெரும்பாலான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததோடு மட்டுமல்லாமல் இஸ்லாம் மதத்திற்கு எதிராக அமைக்கப்படும் எந்த சட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இது போன்ற மசோதாவை நிராகரிப்பது சிறுபான்மையினர் வாழ்க்கையை நரகமாக மாற்றும் செயல் எனக் கூறியிருக்கிறார்.