ராணுவத்தில் பெண்கள்

அணைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு தர வேண்டும் என்ற வாக்கியம், தற்போது செயலாக மாறி வருகிறது. ஒரு பெண் யாரிடம் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்போது வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்,வர வேண்டும் என்பதை தான் எல்லா மதங்களும் விதிவிலக்கில்லாமல் பேசி வருகிறது.
முஸ்லீம் மதம் இதற்கு ஒரு படி மேல் சென்று, நேரடியாக பெண்களுக்கு பல விதிகளை விதித்துள்ளது. இந்நிலையில், மத கலாச்சாரங்கள் காலத்திருக்கேட்டார் போல் மாறி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பெண்களும் குவைத் தேசிய இராணுவ சேவையில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குவைத் தேசிய இராணுவ சேவையில் பெண்களுக்கும் பதிவு தொடங்கப்படும் என்று குவைத் நாட்டின் துணை பிரதமர் ஷேக் ஹமத் அல் அலி அல் சபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே குவைத் காவல் துறையில் கடந்த 20 வருடங்களாக பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். தாலிபான்கள் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் பெண்களை வீட்டை விட்டு வெளியே வர கூடாது, பெண்கள் படிக்க கூடாது என்றெல்லாம் சட்டம் விதித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குவைத் நாடு அறிவித்திருக்கும் இந்த சட்டம் ஒரு வரவேற்புக்குரிய செயலாகும். அதோடு மட்டுமல்லாமல் குவைத் அரசு ஆரம்பத்தில் ராணுவ துணை பணிகள் மற்றும் ராணுவ மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பெண்களை ஒரு வட்டத்திற்கும் அடைக்காமல், சுதந்திரமாக வாழும் காலம் எப்பொழுது தான் வருமோ?