இப்படியும் ஒரு பிரதமரா!!!

நம் நாட்டில் சாதாரணமாக இருக்கும் வட்ட செயலாளரே சொகுசு காருடனும், நாலைந்து ஆட்களுடனும் தான் வளம் வருகிறார்கள் . ஆனால், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல், ஏன் பாதுகாவலர்கள் கூட இல்லாமல் காய்கறி பையுடன் நகரத்தில் உலா வருகிறார் . இதனை அங்குள்ள நெதர்லாந்து மக்கள் சாதாரண நிகழ்வு போலவே பார்க்கின்றனர்.
நம் ஊரில் உள்ள அரசு கட்டிட ஒப்பந்தகளை எடுப்பது அல்லது அதில் கமிஷன் பெறுவது என கல்லாக் கட்டிக் கொண்டு இருக்கும் சில அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு பிரதமர் இருப்பது ஒரு வரவேற்கத்தக்க செயலாகும்.
மேலும் நெதர்லாந்து நாடு, உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் 3வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து தமிழன் என்பவர் தனது யூ டியூப் தளத்திருக்காக காணொளி பதிவு செய்து கொண்டிருக்கும் போது நெதர்லாந்து பிரதமர் சாதாரணமாக கடந்து சென்றுள்ளார். பின் அவரிடம் சென்று கை கொடுத்துவிட்டு “உங்களை பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை நேரில் பார்த்தவுடன் எனக்கு காய் கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது” என்று அவர் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
மேலும், நான் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் எனக்கு நெதர்லாந்து நாடு தான் மிகவும் பிடித்தமான நாடு என்று தமிழன் கூறினார். இதனை கேட்ட பிரதமர் மார்க் ருட்டே இதை கேட்கும் போது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவரை கடந்து சென்றார்.