கார்ப்பரேட்களுக்கு 15% வரி கட்டாயம்

130க்கும் மேற்பட்ட நாடுகள் கார்பொரேட் வரி விகிதத்தை 15 சதவீதமாக குறைக்க ஒப்புதலை அளித்துள்ளது. இந்த முடிவு நியாயமான வரி வழிமுறையின் கட்டமைப்புக்கான தொடக்கம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபங்களை, குறைந்த வரி செலுத்தும் நாடுகளிடம் வரி ஏய்ப்பு செய்து வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் 108 பில்லியன் வரி ஈட்ட இயலும் என்றும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க உதவும் என்றும் OECD(ஓ.இ.சி.டி ) நிறுவனம் கூறியுள்ளது.
விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இந்த ஒப்பந்தத்தால் ஒரு பன்னாட்டு கம்பெனியின் உற்பத்தி ஆலைகள் தங்கள் நாட்டில் இல்லையென்றாலும், வணிகம் புரிந்தால் வரி விதிக்க இயலும்.இதன்மூலம் அமேசான், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 17 பில்லியன் டாலர் வரை நஷ்டத்தை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .
15 சதவீதத்திற்கும் குறைவாக வரி வசூலித்து வரும் அயர்லாந்து, ஹங்கேரி போன்ற நாடுகள் முதலில் எதிர்த்தாலும் பின் ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு வரி மற்றும் அந்நிய முதலீடும் ஆகியவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்.