பதவி ஆசை இல்லை – பிலிப்பைன்ஸ் அதிபர்

பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்  பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட்2016-ம் ஆண்டு  பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதமராக பதவியேற்ற அவர் நாட்டில் போதைப்பொருள் புழங்குவதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறிப்பாக ‘போதைப்பொருள் மீது போர் ’ என்று ஒரு திட்டத்தை அமல்படுத்தினார். அதன் மூலம் போதை பொருட்களை யாராவது விற்றாலும் அல்லது வாங்கினாலும் அவர்களை சுற்று கொன்றுவிடுவார். அந்த திட்டத்தின் மூலம் சுமார் 6000 மக்களை கொன்றுள்ளார்.

சட்டதிட்டங்களை மதிக்க மாட்டார். இந்த சட்டவிரோத செயல்களை செய்ய தனக்கென ஒரு கும்பலை வைத்திருந்தார், ரோட்ரிகோ டுட்ரேட் .மேலும், இவர் 1986-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தேவோ என்ற நகரின் மேயராக இருந்துள்ளார். இவர் ஆட்சி செய்யும் முறையை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ரோட்ரிகோ டுட்ரேட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் ‘அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும்  அதிபர் தேர்தலில் நான் பங்கேற்க போவதில்லை. அரசியலில் இருந்து முழுவதுமாக விலக போகிறேன். எனக்கு பதவி ஆசை என்று ஒன்று கிடையாது. பிலிப்பைன்ஸ் மக்கள் நான் பிரதமர் பதவிக்கு  தகுதியானவன்  அல்ல என்று கருதுகின்றனர். அதையும்  மீறி நான்  தேர்தலில் போட்டியிட்டால் அது  நம் நாட்டு  அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும் எனக்கு பதிலாக எனது மகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார்’ என்று தெரிவித்தார். அவரது மகளான சாரா ரோட்ரிகோ தற்போது தேவோ நகரத்தின் மேயராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…