ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான்கள் அட்டகாசம்… கல்வியிலும் கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு மக்களின் மீதான அடக்குமுறை அதிகரித்து வருகிறது. அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஐநாவும் கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், பெண்கள் உரிமை மற்றும் புர்கா அணிய மறுக்கும் பெண்களை ஈவு இரக்கமின்றி தலிபான்கள் கொன்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதில் முக்கியமாக இரு பாலரும் இணைந்து படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஏற்கெனவே, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வகுப்பறைகள் இருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்களிலும் அந்த முறையைக் கொண்டு வர தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் பல்கலைக்கழக வகுப்பறைகள் திரைச்சீலையிட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு புறம் ஆண்களும் ஒரு புறம் பெண்களும் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.