பொலிவியாவில் தண்ணீர் சண்டை!

உலக நாடுகள் பலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவில் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்ற பிரச்சினை ஒன்று தெற்கு அமெரிக்க நாடான பொலிவியாவில் ஏற்பட்டுள்ளது.
La paz என்ற இடத்தில் விவசாயிகளுக்கும்,படகு இயக்குபவர்களுக்கும் இடையில் ஏரியில் உள்ள நீரை பயன்படுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பலமாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது படகுகளை இயக்குபவர்கள் கூறியதாவது, ஏரியில் உள்ள நீரை விவசாயத்திற்காக பயன்படுத்தினால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து விடும் இதனால் படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும்.
மேலும், படகுகளை இயக்கவில்லை என்றால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் குறைந்து படகு இயக்குபவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தனர்.
விவசாயிகள் தரப்பிலிருந்து அவர்களது கோரிக்கையையும், குறைகளையும் முன்வைத்தனர்.
மேலும் இரு தரப்பினரும் இந்த தண்ணீர் பிரச்சினையை தீர்த்து தரக்கோரி அரசிடம் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.