புர்கா அணியாததால் உயிரைப் பறித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில், ஆட்சியைத் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் நாட்டை விட்டே வெளியேறி வருகின்றனர்.
அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இஸ்ஸாமிய முறைப்படி சம உரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆப்கானில் இனி சண்டை நடக்காது அமைதி திரும்பும் என தலிபான்கள் உறுதியளித்திருந்தனர். இஸ்லாமிய பெண்கள் தங்கள் தலை மற்றும் முகத்தை வெளியே காட்டக்கூடாது என இஸ்லாமிய ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவர்.
இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று கொண்ட தலிபான் அமைப்பினர் காபூல் விமான நிலையம் அருகே பெண்கள் சிலர் தலையில் புர்கா அணியாததால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.