பிரதமரின் பதவியைப் பறித்த அதிபர்

உலகம் முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் துனிசியாவும் ஒன்று. கொரோனா தொற்று பாதிப்பால் அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி, அந்நாட்டு பிரதமரான ஹிச்செம் மெச்சிச்சியை அதிபர் பதவிநீக்கம் செய்து அதிபர் ஆட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் துனிசிய நகரங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். 

அதிபரின் முடிவை சில கட்சிகள் கண்டித்திருந்த போதிலும், ஆட்சிக்கலைப்புக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…