63 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பிக் கொடுக்கப்பட்ட புத்தகம்!

புத்தகப் பிரியர்கள் நூலகத்தில் புத்தகம் எடுத்து படிப்பது உண்டு. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அந்த புத்தகத்தினை அவர்கள் நூலகத்தில் திருப்பி அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கத் தவறினால் அதற்கேற்ற நடவடிக்கைகள் நூலகத்தின் தரப்பில் இருந்து எடுக்கப்படும்.

இங்கிலாந்தில் நூலகத்தில் எடுக்கப்பட்ட ஒரு புத்தகம் திருப்பிக் கொடுக்கப்படாமல் இருந்து தற்போது மீண்டும் நூலகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நூலகத்தில் புத்தகத்தை திருப்பி அளிப்பதில் என்ன சுவாரஸ்யம் எனத் தோன்றலாம். ஆனால், புத்தகம் திருப்பி அளிக்கப்பட்டதோ 63 ஆண்டுகள் கழித்து.

1957ஆம் ஆண்டு படிக்க எடுத்துச்சென்ற புத்தகத்தை தற்போது அந்த வாசகர் திருப்பி அளித்துள்ளார்.தனது உண்மையான அடையாளங்களையும் மறைத்து அனுப்பியதால் அவர் யார் என்று தெரியவில்லை. தாமதமாகத் திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், ஒருபோதும் செய்யாமல் இருப்பதை விடத் தாமதமாகச் செய்வது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இங்கிலாந்து நூலகத்தில் குறிப்பிட்ட காலத்தில் புத்தகம் திருப்பி அளிக்கப்படவில்லை என்றால் அதிகபட்சமாக 20 டாலர் அபராதமாக வசூலிக்கப்படும். இத்தனை ஆண்டுகள் ஆனதால் இந்தப் புத்தகத்திற்கு அபராதம் விதித்திருந்தால் அது சுமார் 4,800 டாலர் வரை அதாவது இந்திய மதிப்பில் 3.5 லட்சம் வரை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…