தலிபான்களின் முக்கிய கோரிக்கை… ஆபத்தில் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகளும் தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த முடிவு ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்தை ஏறப்டுத்தும் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் வருத்தம் தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் 85 சதவீத பகுதிகளைக் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும்,. தற்போது அமெரிக்கப் படைகளும் விலகுவதால் தலிபான்களின் ஆட்டம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆப்கானிஸ்தானுடன் சமரச பேச்சு வார்த்தைக்குக் கூட வராமல் இருந்த தாலிபான் இயக்கம் தற்போது சண்டை நிறுத்த பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளது. ஆனால், போர் நிறுத்தத்திற்கு அவர்கள் விடுத்துள்ள நிபந்தனை ஆப்கானை அரசையும் மக்களையும் கலங்கச் செய்துள்ளது.
அதன்படி, சிறையில் உள்ள 7 ஆயிரம் தலிபான்களை விடுவிக்க வேண்டும் எனவும், அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து தலிபான் இயக்கத்தை நீக்க வேண்டும் எனவும் நிபந்தனை விடுத்துள்ளனர்.
இதன் மூலம், தலிபான்களின் கை மேலும் ஓங்கி, ஆப்கானிஸ்தானுக்கு ஆபத்தாக முடியும் எனப் பலரும் எச்சரித்துள்ளனர்.