இனவெறிக்கு எதிராக இங்கிலாந்து பிரதமரின் அதிரடி நடவடிக்கை

ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. லண்டனில் உள்ள விம்ப்ளி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
இதில், பெனால்ட்டி சூட்டில் இத்தாலியிடம் இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை இழந்தது. பெனால்ட்டி சூட்டைத் தவற விட்ட அணியில் உள்ள மூன்று கருப்பின வீரர்கள் தான் தோல்விக்குக் காரணம் என இங்கிலாந்து மக்கள் அவர்களை வசைபாடி வருகின்றனர்.
இன்னும் சிலர், கருப்பினத்தவர் என்பதால் அவர்கள் மீது இனவெறியைத் தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் இங்கிலாந்தில் பூதாகரம் ஆகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி இனவெறியைத் தூண்டும் வகையில் பொது வெளியில் கருத்து பதிவிடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கால்பந்து போட்டிகளை நேரில் சென்று பார்க்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஒரே நபர் மீண்டும் மீண்டும் இது போன்று செய்து கொண்டிருந்தால் அவருக்கு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தடை பெறும் வகையில் கால்பாந்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.