கொரோனாவிற்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி அவசியமா?

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது, உலகில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு டோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. ஆராச்சியில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி மட்டும் ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொண்டால் போதுமானது எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், கொரோனாவிற்கான இரண்டு டோஸ்களைத் தொடர்ந்து, 12 மாதத்திற்குள் இன்னொரு டோஸ் செலுத்திக் கொள்ள அங்கீகாரம் வேண்டும் என அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்திருந்தது.
ஃபைசர் நிறுவனத்தின் இந்த கோரிக்கையை தற்போது தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்க்கு அவசியம் இல்லை எனக் கூறி நிராகரித்துள்ளது.
மேலும், இது குறித்து அதிபா் பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபெளச்சி, “கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலுல், மக்களின் உடல் நிலை அடிப்படையிலும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு முடிவெடுத்து அறிவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.