தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்களுக்கு அனுமதியில்லை… கனடா பிரதமர் அதிரடி

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தடுப்பூசி அதிகமாகப் போடப்பட்டுள்ள நாடுகளில் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுள்ளதால் அங்கு தொற்று பரவும் வீதம் குறைந்து, ஜூலை 19 ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவடைகிறது.
இதனை முன் மாதிரியாகக் கொண்டு கனடா நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், கனடா நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே கனடாவிற்குள் நுழைய முடியும். வரும் காலங்களில் தொற்று பரவலைக் குறைக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.