காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி சிக்கலில் சிக்கிய பிரதமர்

கடந்த 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி மற்றும் நண்பர்களுடன் முஸ்டிக் தீவில் விமர்சையாகக் கொண்டாடினார்.
இது குறித்து, ஒரு மாத காலமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதிபர் செய்த செலவு குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு, போரிஸ் ஜான்சன் சார்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் ஒருவர் இதற்குப் பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் யாரும் கட்சி நிதியை தனிப்பட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியிருக்கிறார்.
அதிபரின் இந்தப் பதில் மூலம் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னதாக அதிபர் போட்ட உத்தரவை அதிபரே மீறியுள்ளார் என எதிர்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போரிஸ் ஜான்சன் தான் தங்கியிருந்த சொகுசு விலாவின் வாடகையை கட்சி நிதியில் இருந்து செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் குற்றமற்றவர் என நிரூபிக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது செலவிடப்பட்ட தொகையின் முழுவிவரங்களை வெளியிட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.