முடிவுக்கு வரும் இருபது ஆண்டுகாலப் பகை… ஜோ பைடனின் முக்கிய முடிவு

ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே உள் நாட்டு யுத்தம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாகவும் அமெரிக்க படைகளும் அங்கு முகாமிட்டு சண்டையிட்டு வருகின்றனர்.
ஜோ பைடன் பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் படி, செப்டம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை ஏற்பட்டது. இந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஆப்கனை விட்டு வெளியேறும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் ஆஃப்கன் அரசுடன் தலிபான்கள் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்கப்படைகள் வெளியேறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் தேதியே அமெரிக்கப் படைகள் முழுமையாக திருப்பி அழைக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் 20 ஆண்டு காலப் பகை முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை வளப்படுத்த அந்நாட்டு தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஆபத்தில் சிக்க வைக்க விரும்பாததால் அடுத்த தலைமுறை அமெரிக்கர்களை ஆப்கனுக்கு அனுப்ப போவதில்லை எனவும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.