விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவில் ஆய்வு

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி தான் ஒரே தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், உலகின் பல நாடுகளும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சில நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
இதனையடுத்து, அமெரிக்காவில் விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை நேரடியாக சோதனை செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, கலிஃபோா்னியா மாகாணம் சான் ஃபிரான்சிஸ்கோ கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஓக்லாண்ட் மிருகக் காட்சி சாலையில் உள்ள ஜிஞ்சா், மோலி என்ற இரு புலிகளுக்கு முதன்முறையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கரடிகள், மலை சிங்கங்கள், மரநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.