கோலாகலமாக கொண்டாடப்பட்ட அமெரிக்க சுதந்திர தினம்… குடும்பத்துடன் கண்டுகளித்த ஜோ பைடன்!

அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம் கண்கவர் வாணவேடிக்கைகள் உடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த ஆண்டு சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற வாண வேடிக்கையை அதிபர் ஜோ பைடன் குடும்பத்தினரோடு கண்டு களித்தார்.
நியூயார்க் நகரிலும் இதேபோன்று கொண்டாட்டங்கள் அரங்கேறின. கொரோனா வின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா மீண்டு வந்ததாகவும் அதனை மீண்டும் வலிமையடைய செய்ய வேண்டும் எனவும் அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்.