பொம்மை வெடிகுண்டு வெடித்து குழந்தைகள் பலி

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் சிலர் தங்களது வீடு அருகே விளையாடி கொண்டிருந்து உள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பொம்மை வெடிகுண்டு ஒன்று கிடந்துள்ளது. அது வெடிகுண்டு என்று தெரியாமல் குழந்தைகள் விளையாடி வந்துள்ளனர்.
திடீரென, பொம்மை வெடிகுண்டு வெடித்து சிதறியது . இதில், விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆனால், பொம்மை வெடிகுண்டை வைத்தவர் யார் எனத் தெரியவில்லை. இதுவரை, இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.