43 முறை கொரோனாவை வென்ற பிரிட்டன் தாத்தா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
ஒரு முறை கொரோனா வைரஸ் தாக்கிய பிறகு, மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குவது அரிதாகத் தான் இருக்கிறது.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தாத்தாவுக்கு கடண்ட 10 மாதங்களில் கிட்டத்தட்ட 43 முறை உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாம்.
பிரிட்டனில் 72 வயதான டேவ் ஸ்மித் என்பவர் வாகன பயிற்சியாளராக இருக்கிறார். இவருக்குத் தான் 43 முறை கொரோனா பாசிட்டிவ் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் பாதிப்பு தீவிரமாகி அதற்காக 7 முறை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இவ்வளவு முறை கொரோனா வந்து விட்டது. நாம் கண்டிப்பாக பிழைக்க மாட்டோம் என்று கருதி சவப்பெட்டியைக் கூட தயார் செய்து விட்டாராம் டேவ் ஸ்மித்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்துக் கொண்டுள்ளார். 43 முறை கொரோனாவை வென்ற பிரிட்டன் தாத்தா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.