அமெரிக்காவில் முக்கிய பதவியில் தமிழர்…வாழ்த்து தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின்!

அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் 10-வது தலைவராக ராஜகோபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இல்லினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை ராஜகோபால் ஈச்சம்பாடி பெறுகிறார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவில் 131 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால், தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை என குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூரில் பிறந்து சென்னையில் பள்ளி கல்லூரி படிப்பை முடித்த ராஜகோபால் ஈச்சம்பாடி, தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்கு சான்றாக விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.