ரொனால்டோவின் செயலால் ஒரே நாளில் பெரும் நஷ்டமடைந்த கோகோ கோலா
உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தன் மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை தூக்கி வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து மேலே தூக்கிக் காட்டினார்.
இதனால், அவர் கோகோ கோலாவைத் தவிர்த்து விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பொருளில் அவர் இதைச் செய்வதாக கூறப்பட்டது. இதனால், இந்த வீடியோ வெளியாகி உலகில் உள்ள கால்பந்து ரசிகர்கள் கோகோ கோலாவைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என வைரலானது.
இதனால் கொக்ககோலா நிறுவனத்திற்கு நேற்று ஒரே நாளில் சுமார் 4 பில்லியன் டாலர் நஷ்டமடைந்ததாகவும் இந்திய மதிப்பில் சுமார் 30,000 கோடி என்றும் கூறப்படுகிறது.
ரொனால்டோவின் ஒரு செயல் கோகோ கோலா நிறுவனத்திற்கு இவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.