அதிபருக்கே அபராதம் விதித்த பிரேசில் அரசு
பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனா பதவி வகித்து வருகிறார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
இதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனாவின் அலட்சியமான நடவடிக்கைகள் தான் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதிபர் ஜெய்ர் போல்சனாவும் கொரோனா வைரஸ் தொற்றும் ஒரு காய்ச்சம் போலத்தான். இதற்கு முகக்கவசம், சமூக இடைவெளி என்பதே தேவையில்லை என்ற வகையில் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
பிரேசிலில் இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சா பவுலா மாகாணத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றார்.
அப்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற எந்த விதிகளையும் அவர் பின்பற்றவில்லை. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததால் சா பவுலா நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிபராக இருந்தாலும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததால் அவருக்கு 100 டாலர் அபராதம் விதித்துள்ளது.