ஒரு விண்வெளி பயணத்திற்கு 205 கோடியா?

அமேசான் நிறுவனத்தின் தலைவர்  ‌ஜெஃப் பெஸோஸ், புளூ ஆரிஜின் (Blue Origin) விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

அதன்படி, தனது விண்வெளி பயணத்தை ஜூலை 20 ஆம் தேதி நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் என்ற விண்கலம் மூலம் துவங்க உள்ளது.

தனது நிறுவனத்தின் முதல் விண்வெளி பயணத்தில் ஜெஃப் பெஸோஸ் மற்றும் அவரது சகோதரர் பயணிக்க உள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து மேலும், ஒரு நபர் பயணிக்க முடியும் என்பதால், அந்த ஒரு இடத்துக்காக ஏலம் நடைபெறும் என புளூ ஆரிஜின் நிறுவனம் அறிவித்திருந்தது.

உலகின் 140 நடுகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஏலத்தில் பங்கெடுத்தனர். ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன் தினம்  28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.205 கோடி) ஏலம் கேட்டுள்ளார்.

இதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காத நிலையில், ஜெஃப் பெஸோஸ் உடன் பயணிக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரைப் பற்றிய விவரங்களை புளூ ஆரிஜின் நிறுவனம் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…