தடுப்பூசி போடவில்லையா மொபைல் எண் முடக்கப்படும்…அரசு அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறையவில்லை.
தொற்று பாதிப்பில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால், பொது மக்களில் சிலர் இன்னும் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலர் இரண்டாம் டோஸ் செலுத்தாமல் உள்ளனர்.
இவ்வாறு உள்ளவர்களுக்காக அரசு முக்கியமான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 3 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள வரவில்லை.
இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள வராதாவர்களின் மொபைல் எண்கள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.