டிக்டாக்கிற்கான தடை நீக்கம்!

அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கர்களின் தகவல்களை டிக்டாக், விசாட் உள்ளிட்ட பல சீனாவின் 8 வலைதளங்கள் திருடுவதாகத் தெரித்தார். இதனைத் தொடர்ந்து, அந்த 8 சமூக வலைதளங்களுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
முக்கியமாக, ட்ரம்ப் தடை செய்த பல விஷயங்களில் மாற்றங்களைச் செய்து வருகிறார். பதவியேற்றதும் முதல் வேலையாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அவர் செய்துள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
இந்நிலையில், டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களுக்கான விதிக்கப்பட்டிருந்த தடையைத் திரும்பப் பெறுவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வலைதளங்கள் தகவல்களை திருடுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், செயலிகளுக்கான புதிய விதிகளை உருவாக்க விரிவான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.