ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்…உலக சாதனைப் படைத்த பெண்

தென்னாப்பிரிக்காவில் டெபோஹோ சோடெட்சி மற்றும் கோசியாம் சித்தோல் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக்குழந்தை பிறந்தது. இதனைத்தொடர்ந்து, கோசியாம் சித்தோல் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.
இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் 8 குழந்தைகள் வரை பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தது.
இந்நிலையில், இவர் பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது. இந்த பிரசவத்தில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் பத்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இதற்கு முன் மாலி நாட்டை சேர்ந்த ஹலிமா சிசி என்ற 25 வயது பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்தது தான் உலக சாதனையாக இருந்தது.
அந்தச் சாதனையைத் தற்போது, கோசியாம் சித்தோல் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததுடன் மூலம் முறியடித்துள்ளார்.