ஆவடியில் சிக்கிய ஆஸ்திரேலிய ஆந்தை!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை ஒன்றை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென அரியவகை ஆந்தை ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்க அங்கு ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பறக்க முடியாமல் தடுமாறிய நிலையில் கிடந்த அந்த ஆந்தையை மீட்ட சமூக ஆர்வலர் பாலமுருகன் என்பவர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் தெரிவிக்கப்பட்டு நீண்ட நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அந்த ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்தனர். இது ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை ஆந்தை என்றும், பிற பறவைகளால் தாக்கப்பட்டு கீழே விழுந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…