பிரிட்டனில் வேகமெடுக்கும் ’டெல்டா’ வைரஸ்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கொரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்குப் பரவியுள்ளதாக செய்தி வெளியானது. மேலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸிற்கு ’டெல்டா’ என பெயரிடப்பட்டது.

தற்போது, அதிக வீரியம் மிக்க இந்த டெல்டா வைரஸ் தொற்றால் பிரிட்டனில் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலத்தில், பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக 12,431 பேருக்குப் புதிதாக கொரோனா பாதித்த நிலையில், அவர்களில் 5,472 பேருக்கு டெல்டா வகை கொரோனா பரவியிருப்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் பிரிட்டன் அரசு ஈடுபட்டுள்ளது.

பிரிட்டனில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை வைரஸை விடவும் டெல்டா வைரஸ் அதிக வீரியத்துடன் இருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *