தந்தை, தங்கையைக் காப்பாற்றிய 7 வயது சிறுவனின் துணிச்சல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஸ்டீபன் போவ்சிட் என்பவர் வசித்து வருகின்றனர். இவருக்கு, இவருக்கு செஸ் என்ற மகனும் அபிகெல் என்ற மகளும் உள்ளனர்.
அனைவரும், வார இறுதி நாட்களில் பொழுதைக் கழிக்க வெளியில் செல்வது வழக்கம். அந்த வகையில், அவர் தன் இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் மீன் பிடிக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அமெரிக்காவில், ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும் போது, 6 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு லைவ் ஜாக்கெட் கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற விதி உள்ளது.
அதன்படி, அவரது மகளுக்கு மட்டும் லைவ் ஜாக்கெட் அணிவித்திருந்தார் ஸ்டீபன் போவ்சிட்.
இந்நிலையில், மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடத் தொடங்கியுள்ளது. ஸ்டீபன் போவ்சிட்குக்கும் அவரது மகனுக்கும் நீச்சல் தெரியும்.
ஆனால், அவரது மகளுக்கு நீச்சல் தெரியாது. இதனால், அவர் மகளுடன் இருந்து கொண்டு மகனை மட்டும் நீச்சல் அடித்து கரைக்குச் சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வர அனுப்பியுள்ளார்.
அவரது 7 வயது மகன் தைரியமாக சுமார் ஒரு மணி நேரம் தைரியமாக நீச்சல் செய்து கரைக்குச் சென்று, தீயணைப்பு வீரர்களை அழைத்து வந்து ஆற்றில் சிக்கித் தவித்த தனது தந்தையையும், தங்கையையும் காப்பாற்றியுள்ளார்.
நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் தான் இப்படி ஒரு மணி நேரம் நீச்சல் செய்ய முடியும். ஆனால், ஒரு சிறுவன் இதைச் செய்துள்ளதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.