நிறுவனம் தொடங்கிய அதே தேதியில் சிஇஓ பதவியிலிருந்து விலகும் அமேசான் நிறுவனர்

1994 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி அமேசான் நிறுவனத்தை ஜெஃப் பெசோஸ் நிறுவினார். அன்றிலிருந்து நிறுவனத்தின் தலைமைச் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வரும் ஜூலை 5 ஆம் தேதியுடன் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமேசான் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய ஜெஃப் பெசோஸ், “எனக்கு மிகவும் உகந்த தேதியை, என்னுடன் நெருக்கமான தேதியை தேர்வு செய்துள்ளேன்.

அந்தத் தேதியில் நான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். அமேசான் தொடங்கப்பட்ட ஜூலை 5-ம் தேதி நான் விலகுகிறேன். ஏறக்குறைய 27 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தை தொடங்கி நடத்தி இருக்கிறேன்”என பேசியுள்ளார்.

அதே நாளில், கடந்த 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிவரும் ஆன்டி ஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *