பதின் வயதினருக்கு 100% கொரோனா வராமல் தடுக்கும் மாடர்னா தடுப்பூசி

கொரோனா பரவலத்தைத் தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் ஒரே தீர்வு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கொரோஅனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அமெரிக்காவிலும், 18 வயதை மேற்பட்டவர்களுக்குத் தடுப்புசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், தொற்று பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனையடுத்து, 12 முதல் 17 வரை உள்ள பதின்வயதினருக்கும் பைசர் நிறுனத்தின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபானே பான்செல், “எங்களின் எம்ஆர்என்ஏ-1273 தடுப்பூசி 12 வயது முதல் 17 வயதுள்ள பதின்வயதுப் பிரிவினருக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 100 சதவீதம் முழுமையாகப் பாதுகாக்கிறது எனப் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
எங்களின் ஆய்வு முடிவுகளை அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் ஜூன் முதல் வாரத்தில் வழங்கி அனுமதி பெறுவோம். கரோனா வைரஸை ஒழிப்பதற்கான பணியில் எங்களின் பணியைத் தொடர்ந்து செய்வோம்” என கூறியுள்ளார்.