காங்கோவில் எரிமலை வெடிப்பு…பலர் பலியான பரிதாபம்!

காங்கோ நாட்டில் 20 ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த நியிராகோங்கோ எரிமலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பில் கோமா நகரம் பெரிய உயிரிழப்பையும், பொருள் சேதத்தையும் சந்தித்துள்ளது.

திடீரென எரிமலை வெடித்ததால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பலர் எரிமலையின் தீ பிளம்பிற்கு பலியாகினர்.

சிலர் அவர்களது கார்களின் மூலம் தப்பிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் எரிமலையின் தீ பிளம்பிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் புகை மண்டலம் சூழ்ந்ததால் அவர்களுக்கான தப்பிக்க கூடிய வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது.

இதுவரை இந்தக் கோர விபத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

எரிமலை வெடித்து சிதறியதையடுத்து நிலநடுக்கம் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *