பாலைவனத்தில் மரம் நடும் சவுதி அரேபியா!

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் மாசுபாடு உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக சவுதி அரேபியா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபடுதலை தடுக்கும் வகையில் பாலைவனத்தில் 1000 கோடி மரக்கன்றுகளை நட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
இதனை சவுதி பசுமை திட்டம் என்ற முன்னெடுப்பின் மூலம் 2030-ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்த உள்ளதாக அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.