தூக்கி எறிந்த லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட்…. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
அமெரிக்காவில் லாட்டரி சீட்டு கடையில் பெண் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். அலுவலகம் செல்லும் அவசரத்தில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டை பாதி சுரண்டியதுடன் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு சென்று விட்டார்.
இதைப் பார்த்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாட்டரி கடை உரிமையாளர் அந்த பாதி சுரண்டிய லாட்டரி சீட்டினை எடுத்து மீதமுள்ளதையும் சுரண்டி உள்ளார்.
அதன்பின் எந்த லாட்டரி சீட்டை அந்த அமெரிக்கப் பெண்மணி அலுவலகம் செல்லும் அவசரத்தில் தூக்கி வீசிச் சென்றாரோ அதற்கு ஒரு மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்துள்ளது. இந்திய மதிப்பில் 7.2 கோடி ரூபாயாகும்.
இதற்கு அடுத்து நடந்த சம்பவம் தான் சுவாரஸ்யமானது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த லாட்டரி கடை உரிமையாளர் நமக்கு யோகம் என்று ஜாக்பாட் சீட்டை வைத்துக்கொள்ளவில்லை. மாறாக, அந்த அமெரிக்கப் பெண்மணியை தேடிப் பிடித்து இந்த ஜாக்பாட் சீட்டை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
கடை உரிமையாளரின் இந்த செயல் அனைத்து தரப்பினராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்கும் பொழுது நான் ஒருநாள் கோடீஸ்வரனாக இருந்ததே எனக்குப் போதும் எனத் தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.