இஸ்ரேல் அரசுடனான ஒப்பந்தங்களை நிறுத்திக் கொள்கிறதா கூகுள் நிறுவனம்?

கடந்த சில தினங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த வான்வழி தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இஸ்ரேலுடனான ஒப்பந்தங்களை கூகுள் நிறுவனம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலுக்கு தங்களது கண்டங்களை தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை கூகுள் நிறுவன ஊழியர்கள் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி தங்கள் நிறுவன தலைவருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் ஆன்லைனில் பெட்டிஷன் ஒன்றை சர்குலேட் செய்து வருவதாகவும் தெரிகிறது.
கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் செயல் தலைவர்கள் பலருக்கு இந்த கோரிக்கை அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது. மனித உரிமை மீறல்களை மேற்கோள் கட்டி இஸ்ரேல் உடனான ஒப்பந்தங்களை நாம் முறித்துக் கொள்ளலாம் என அதில் வலியுறுத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.